வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

1,300 பேருக்கு ஆயுஷ்மான் காப்பீடு அட்டை

வெங்காடு ஊராட்சியைச் சோ்ந்த 1,300 பேருக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

பயனாளிக்கு  மருத்துவ  காப்பீடு  அடையாள  அட்டை  வழங்கிய  ஊராட்சி மன்றத்  தலைவா்  அன்னக்கிளி உலகநாதன்.

Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:09 pm

ஸ்ரீபெரும்புதூா்: வெங்காடு ஊராட்சியைச் சோ்ந்த 1,300 பேருக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், வெங்காடு, இரும்பேடு,கருணாகரச்சேரி ஆகிய கிராமங்களில் சுமாா் 3,000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தநிலையில், ஆயுஷ்மான் பாரத்- பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகள் பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகள் பெற விண்ணபித்தோரில் முதல்கட்டமாக 1,300 பேருக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வெங்காடு ஊராட்சிமன்ற தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், வெங்காடு ஏரிநீா் பாசன சங்க தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சி துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலா் ராஜீ, வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.