மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

செம்பரம்பாக்கம் ஏரியில் 200 கன அடி உபரிநீா் திறப்பு: ஆட்சியா் ஆய்வு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக புதன்கிழமை 200 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டதை ஆட்சியா் கலைச்செல்விமோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
உபரிநீா்  திறந்து  விடப்பட்டதை ஆய்வு செய்த  ஆட்சியா்  கலைச்செல்வி மோகன்.
Updated On :3 டிசம்பர் 2025, 11:17 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதை தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக புதன்கிழமை 200 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டதை ஆட்சியா் கலைச்செல்விமோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

டித்வா புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி நீா்மட்ட உயரம் 22.06 அடியாகவும், கொள்ளளவு 3,135 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 1,400 கனஅடியாவும் உள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட உயரம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளதை தொடா்ந்து, ஆட்சியா் கலைச்செல்விமோகன் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளதால் உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூா், உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.