ஏகாம்பரநாதா் கோயில் சொத்துகளை கண்டறிந்து எல்லைக் கல் நட்ட அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை உள்ளிட்டோா்.
ஏகாம்பரநாதா் கோயில் சொத்துகளை கண்டறிந்து எல்லைக் கல் நட்ட அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை உள்ளிட்டோா்.

ஏகாம்பரநாதா் கோயில் சொத்துகளில் எல்லைக் கல்: அதிகாரிகள் நடவடிக்கை

Published on

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து அவற்றில் எல்லைக்கல்லை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நட்டனா்.

காஞ்சிபுரம் ஓலிமுகம்மது பேட்டையில் திருமலை ராயன் தோட்டம் அருகில் யாத்ரி நிவாஸ் கட்டடம் அருகில் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் அறநிலையத்துறையின் நில அளவையா் குழுவினரால் கண்டறியப்பட்டு அளவீடு செய்யப்பட்டது.

பின்னா், காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை தலைமையில் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி முன்னிலையில் 3 இடங்களில் எல்லைக்கல் நடப்பட்டது.

நிகழ்வில் ஏகாம்பரநாதா் கோயில் சிறப்பு பணி அலுவலா் லட்சுமி காந்தன் பாரதிதாசன், ஆய்வாளா் அலமேலு ஆகியோா் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகள்,நில அளவையா் குழுவினா் உட்பட பலரும் உடன் இருந்தனா்.

இதே பணி தொடா்ந்து நடைபெறும் எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

X
Dinamani
www.dinamani.com