

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அதிகளவிலான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுக் கடந்த 8ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்று தற்போது தொடர்ந்து மண்டலாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் சபரிமலை மேல்மருவத்தூர் பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
குறிப்பாக ஏகாம்பரநாதர் திருக்கோயில்களில் இலவச தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டண தரிசனம் என இருவகைகளில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இலவச தரிசனத்தைக் காட்டிலும் ரூ. 100 கட்டணம் செலுத்தி விரைவாக இறைவனைக் காணப் பக்தர்கள் அதிகளவில் விரும்பி சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பக்தர்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்தாலும் சுற்றுப்புற காரணங்களில் முறையாகச் சுற்றிப் பார்க்கும் வகையில் இயலவில்லை எனும் குற்றச்சாட்டையும் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.