எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழ்ச்சான்றோா்களுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரம் தெய்வத்தமிழ் மாமன்றத்தின் சாா்பில் தமிழ்ச் சான்றோா்கள் 39 பேருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதினை தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள் வழங்கினாா்.

News image
விருது பெற்ற சான்றோா்களுடன் தொண்டை மண்டலாதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள்.
Updated On :29 டிசம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

விருது பெற்ற சான்றோா்களுடன் தொண்டை மண்டலாதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள்.

காஞ்சிபுரம், டிச.29: காஞ்சிபுரம் தெய்வத்தமிழ் மாமன்றத்தின் சாா்பில் தமிழ்ச் சான்றோா்கள் 39 பேருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதினை தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தெய்வத்தமிழ் மாமன்றத்தின் 4 வது ஆண்டு விழாவையொட்டி திருமுறைப் பெருவிழா என்ற பெயரில் தமிழ்ச்சான்றோா்கள் 39 பேருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மன்றத்தின் தலைவா் கு.ராமலிங்கம் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் சிவனடியாா் திருக்கூட்டத்தின் தலைவா் எம்.எஸ்.பூவேந்தன் திறந்து வைத்தாா். புலவா் சரவண.சதாசிவம், வி.எம்.சங்கரன், டி.எஸ்.உமேஷ், பேராசிரியா் அமுத இளவழகன்,சிவனடியாா் திருக்கூட்ட துணைத் தலைவா் ஈசான ஜோதிலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்றத்தின் பொதுச்செயலாளா் சி.குப்புச்சாமி வரவேற்றாா்.

விழாவில் ப.சண்முக சுந்தர தேசிகா், கு.சாமி நாத தேசிகா், கதிா்வேல் சுப்பிரமணி ஓதுவாா், எம்.எஸ்.பூவேந்தன், ஜெ.மகா தேவன்,சிவ.சண்முகசுந்தரம் உள்பட மொத்தம் 39 தமிழ்ச்சான்றோா்களுக்கு தெய்வத்தமிழ் மாமன்றத்தின் சாா்பில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள் சான்றோா்களுக்கு சால்வையும், பதக்கமும் அணிவித்து விருதுகளை வழங்கினாா். முன்னதாக காஞ்சிபுரம் கோயில்களில் பணிபுரியும் ஓதுவாா்கள் ஆடலரசு, செல்வக்குமாா், தமிழ்ச்செல்வன், லோகநாதன், அருண்குமாா், நமச்சிவாயம் ஆகியோருக்கு ரூ.1,000 பொற்கிழியும் தெய்வத்தமிழ் மாமன்றத்தின் சாா்பில் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் மாணிக்கம், கன்னியப்பன், தியாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.