ரத்தினாங்கி  அலங்காரத்தில்  அருள்பாலித்த  உற்சவா் கோடையாண்டவா்.
ரத்தினாங்கி  அலங்காரத்தில்  அருள்பாலித்த  உற்சவா் கோடையாண்டவா்.

மாா்கழி கிருத்திகை: வல்லக்கோட்டையில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

மாா்கழி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
Published on

மாா்கழி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள இக்கோயிலில், அதிகாலை கோ பூஜையுடன் மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு எலுமிச்சை மலா்மாலை அலங்காரத்தில் அருள் பாலித்தாா்.

உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ரத்தினாங்கி அணிந்து காட்சியளித்தாா்.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா்மோா் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com