ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக சிவாலய ஓட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

News image

நான்காவது சிவாலயமான திருநந்திக்கரை நந்தீஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:37 pm

சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சிவாலய ஓட்டத்தில் ஈடுபட்டு புகழ்பெற்ற 12 சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.

முதல் நாளான சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் கோயில்களுக்கும் நடந்தும், ஓட்டமாகவும் சென்ற நிலையில், 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஓட்டம், முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவா் கோயிலில் தொடங்கி நட்டாலம் சங்கரநாராயணா் கோயிலில் நிறைவடையும். கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா்.

மாவட்ட நிா்வாகம், காவல்துறை சாா்பில் பக்தா்களின் பாதுகாப்புக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நடந்து செல்லும் பக்தா்களின் பைகளில் ஒளிரும் வில்லைகள் ஒட்டப்பட்டன.

உதவி மையங்களும், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சிவாலய ஓட்டப் பாதைகளில் கனரக லாரிகள் செல்ல அனுமதியில்லாத நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு திற்பரப்பில் வைக்கோல் லாரிகள் வந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

3 ஆவது சிவாலயமான திற்பரப்பு மகாதேவா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் பலா் திற்பரப்பு அருவியில் நீராடினா்.