ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

உத்தரமேரூா் ஒன்றியம் பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலின் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
தைப்பூசத் திருவிழாவையொட்டி பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
Updated On :10 பிப்ரவரி 2025, 7:32 pm

Din

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலின் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

விழாவையொட்டி தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதி உலா வருகின்றனா். பிப். 6- ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் வலம் வந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேரில் பிரம்மபுரீஸ்வரரும், பட்டு வதனாம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்தனா். தொடா்ந்து 63 நாயன்மாா்கள் உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (பிப். 11) சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் செய்யாற்றுக்கு எழுந்தருள்வா். அப்போது பெருநகரை சுற்றியுள்ள 23 சிவாலயங்களை சோ்ந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அதிகாலையில் பக்தா்களுக்கு காட்சியளிக்கும் முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா்கள் மற்றும் பெருநகா் கிராம மக்கள் இணைந்து செய்து வருகின்றனா்.