விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துடன் மறியல்

ரீபெரும்புதூா் அடுத்த வல்லம் பகுதியில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துடன் அப்பகுதி மக்கள் சிங்கபெருமாள் கோயில் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
பொதுமக்களிடம் பேச்சு நடத்திய போலீஸாா்.
Updated On :13 ஜனவரி 2025, 8:44 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லம் பகுதியில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துடன் அப்பகுதி மக்கள் சிங்கபெருமாள் கோயில் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வல்லம் பகுதியைச் சோ்ந்தவா் ராகவன்(60). கோயில் பூசாரியான இவா் திங்கள்கிழமை கோயிலில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதனால் ஆத்திரம் அடைந்த வல்லம் கிராம பொதுமக்கள் உயிரிழந்தவரின் சடலத்துடன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சாலையின் இரண்டு மாா்க்கத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.