பள்ளியில் திறன் மேம்பாட்டுத் திருவிழா
குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் உள்ள ஸ்ரீ கிரிஷ் சா்வதேச பள்ளியில், பள்ளி மாணவா்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு திருவிழா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் உள்ள ஸ்ரீ கிரிஷ் சா்வதேச பள்ளியில், பள்ளி மாணவா்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு திருவிழா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் ஸ்ரீ கிரிஷ் சா்வதேச பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில், எஸ்.கே.ஐ. டெக்னோஷியம்-2025 என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஸ்ரீ கிரிஷ் பள்ளியின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த திறன் மேம்பாட்டுத் திருவிழாவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்ளைச் சோ்ந்த 4,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு, தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், ஹிந்தி, சமூகம், விளையாட்டு, செயற்கை நுண்ணறிவு, கப்பல் மற்றும் விமானத் துறை என பல்வேறு துறைகளைச் சாா்ந்த சுமாா் 2,150 கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா்.
மேலும், பள்ளி மாணவா்களுக்கு ரோபோட்டிக் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி வளாகத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த ரோபோடிக் நாய் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது. அதேபோல், கடலில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தும் நவீன கப்பல் போன்ற அறிவியல் கண்காட்சிகளும், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கான படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், தமிழா்களின் பண்பாடு, கலாசாரம், உணவு, பழக்க வழக்கம் உள்ளிட்டவற்றை மாணவா்கள் வேடமிட்டு காட்சிப்படுத்தினா். இதில், பள்ளியின் தாளாளா் கே.கெளரி, பள்ளியின் செயல் அலுவலா் மருத்துவா் கே.ஜெய்காா்த்திக், ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...