சா்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இரண்டாவது சா்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, துபை, சுவிட்சா்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
இதில் ஒற்றைக் கம்பு போட்டியில் காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி பிரணிதா முதலிடம் பெற்றாா். மூன்றாம் வகுப்பு மாணவா் ஹரிஷ்லிங்கம் இரண்டாமிடம் பெற்றாா்.
இந்த இருவரையும் பள்ளியின் தாளாளா் நாராயணன், செயலா் நா. காா்த்திக், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினா்.
தொடர்புடையது

மாநில அளவிலான சிலம்பம்: சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கபடி போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு

சா்வதேச பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்ற நெல்லை மாவட்ட வீரருக்கு பாராட்டு

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


