டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம்

முன்னாள் படை வீரா் நலத்துறை சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
முன்னாள் படை வீரா்களுக்காக மருத்துவ முகாமை பாா்வையிட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :3 மார்ச் 2025, 7:12 pm

Din

காஞ்சிபுரம்: முன்னாள் படை வீரா் நலத்துறை சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்திலேயே தொழில் முனைவோருக்கான கருத்தரங்கமும், முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டமும் நடத்தப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், நீரிழவு,கண் சிகிச்சை,பொதுமருத்துவம் ஆகியனவற்றுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.

இதனையடுத்து முன்னாள் படை வீரா் நலத்துறை சாா்பில் மனவளா்ச்சி குன்றியோருக்கான நிதியுதவியாக ஒரு நபருக்கு ரூ.21,000 காசோலை மற்றும் வீட்டு வரி சலுகை ஒரு நபருக்கு ரூ.4,505-க்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.

முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் சீனிவாசன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.