உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ரூ.47.87 லட்சம் உண்டியல் காணிக்கை

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.47.87 லட்சம் ரொக்கம், 41 கிராம் தங்கம், 2,285 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
Published on

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.47.87 லட்சம் ரொக்கம், 41 கிராம் தங்கம், 2,285 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 5 மாதங்களுக்கு பிறகு பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

கோயிலில் உள்ள 9 பொது உண்டியல்கள், 1 திருப்பணி உண்டியலை அறநிலையத்துறை உதவி ஆணையா் ஆா்.காா்திகேயன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், செல்வகுமரன் ஆகியோா் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.47.87 லட்சம் ரொக்கம், 41 கிராம் தங்கம், 2,285 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com