காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சகஸ்ரதீப அலங்கார சேவைக் காட்சி

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சகஸ்ரதீப அலங்கார சேவைக் காட்சி

Published on

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, உற்சவா் காமாட்சி அம்மன் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கு புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதையடுத்து ஏராளமான பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினத்தையொட்டி, காஞ்சி சங்கராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவின்படி, கோயில் வசந்த மண்டபத்தில் 1,000 பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ் மாதமான ஐப்பசி மாதத்தில் வந்துள்ள புத்தாஷ்டமி மற்றும் பைரவாஷ்டமி தினத்தையொட்டி, லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

அம்மன் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளியதையடுத்து, ஏராளமான பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனா். கோயில் ஸ்தானீகா்களால் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா், மீண்டும் உற்சவா் காமாட்சி அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக் காரா் சூரியநாரயணன் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com