மாவட்ட அறிவியல் கண்காட்சி
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி சுங்குவாா்சத்திரம் பகுதியில் தனியாா் பள்ளியில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினா்.
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அமைப்பின் சாா்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 60 அரசு உயா்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா். கண்காட்சியில் ஆசிரியா்களும் பங்கேற்று அவா்களின் கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்தினா்.
மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கோமதி தலைமையிலும், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை)காந்திராஜன் முன்னிலையில் நடைபெற்ற கண்காட்சியை காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி தொடங்கி வைத்தாா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

