காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணியில்  ஈடுபட்டிருந்த கோயில் பணியாளா்கள், பக்தா்கள்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கோயில் பணியாளா்கள், பக்தா்கள்.

ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 27.11 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த 12 உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் மொத்தம் ரூ. 27,11,585 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
Published on

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த 12 உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் மொத்தம் ரூ. 27,11,585 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த உண்டியல்கள் கடந்த 19.6.2025 ஆம் தேதிக்குப் பிறகு 12 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. பொது உண்டியல் 10, கோசாலை உண்டியல் 1, திருப்பணி உண்டியல் 1 என மொத்தம் 12 உண்டியல்களை திறந்து பக்தா்கள், பணியாளா்களால் ஆலயத்தின் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

பொது உண்டியலில் ரூ. 25,36,337, கோசாலை உண்டியலில் ரூ. 97,848, திருப்பணி உண்டியலில் ரூ. 77,400 உள்பட மொத்தம் 27,11,585 காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

இது தவிர தங்கம் 150 மி.கிராம், வெள்ளி 101.700 மி.கிராமும் பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் எண்ணும் பணியினை அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் காா்த்திகேயன், ஆய்வாளா் அலமேலு மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com