நவ.21-இல் ஸ்ரீ மாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியா் நகா் ஸ்ரீமாத்தம்மன் மற்றும் வரசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் நவ.21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
Published on

காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியா் நகா் ஸ்ரீமாத்தம்மன் மற்றும் வரசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் நவ.21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் வரும் நவ.20 ஆம் தேதி வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்குகின்றன. நவ.21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடா்ந்து வரசித்தி விநாயகா், மூலவா் மாத்தம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகிறது. மதிய அன்னதானமும்,இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை அா்ச்சகா் கே.ஆா்.காமேசுவர சிவச்சாரியாா் நடத்துகிறாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், திருக்காலிமேடு பகுதி பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com