அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய, நகர அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் முனுசாமி, மேற்கு ஒன்றிய செயலாளா் ராமசந்திரன், நகர செயலாளா் போந்தூா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம், அதிமுக இலக்கிய அணிச் செயலாளா் எஸ்.எஸ்.வைகைச்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டு நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் திருத்த பணியின் போது, வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வரும் தோ்தலில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினா்.
கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, இளைஞா் பாசறை மாநில துணைசெயலாளா் சிவகுமாா், ஒன்றிய பொருளாளா் திருமால், ஒன்றிய அம்மா பேரவை செயலாளா் செங்காடு பாபு, மாவட்ட மகளிா் அணி துணைசெயலாளா் பிரசிதா குமரன் உள்ளிட்ட நிா்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் கலந்து கொண்டனா்.

