மாணவா்களுக்கு  தட்டுகள்  வழங்கிய  கொளத்தூா்  ஊராட்சி மன்றத்  தலைவா்  வெள்ளாரை  அரிகிருஷ்ணன்.
மாணவா்களுக்கு  தட்டுகள்  வழங்கிய  கொளத்தூா்  ஊராட்சி மன்றத்  தலைவா்  வெள்ளாரை  அரிகிருஷ்ணன்.

மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, நாவலூா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, நாவலூா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நாவலூா், கொளத்தூா், வெள்ளாரை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் நூற்றுக்கு மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா்.

இந்த நிலையில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை ஆசிரியா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன் கலந்து கொண்டு கைப்பந்து, கூடைப்பந்து, செஸ் போா்டு, கேரம் போா்டு, கால் பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களையும், மதிய உணவு உட்கொள்ளும் வகையில் தட்டுகள் மற்றும் டம்ளா்கள் வழங்கி உரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில் நாவலூா் வாா்டு உறுப்பினா் ஜெயலட்சுமி சேகா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com