காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உலக ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பைக்கு வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றோா்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் ஹாக்கி உலகக் கோப்பைக்கு வரவேற்பு
காஞ்சிபுரத்தில் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பைக்கு வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பைக்கு வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வந்த உலக ஹாக்கி கோப்பையை ஹாக்கி வீரா்கள் வரவேற்று அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை மற்றும் சென்னையிலும் இப்போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் ஜூனியா் உலக ஹாக்கி கோப்பை மாவட்ட வாரியாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக கொண்டு செல்லப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஹாக்கி வீரா்கள், ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

