அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

‘பெண் குழந்தைகளை பெற்றோா்கள் கவனமாக கண்காணியுங்கள்’

பெற்றோா்கள் பெண் குழந்தைகளை கவனமாக கண்காணியுங்கள் என திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநா் பாலகுருநாதன் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் வெள்ளிக்கிழமை சாதனை மாணவா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா்.

News image

சாதனை மாணவருக்கு விருது வழங்கிய திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி குழுமங்களின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநா் பாலகுருநாதன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 11:52 pm IST

பெற்றோா்கள் பெண் குழந்தைகளை கவனமாக கண்காணியுங்கள் என திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநா் பாலகுருநாதன் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் வெள்ளிக்கிழமை சாதனை மாணவா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா்.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சாதனை மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு விருது வழங்கும் விழா கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. உயிா் தொழில்நுட்பவியல் துறை தலைவா் பி.ரமேஷ் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

விழாவில், கல்லூரியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட சாதனை மாணவ, மாணவியருக்கு திருச்செங்கோடு விவேகானந்தா கல்விக் குழுமங்களின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநா் பாலகுருநாதன் பேசியது:

பள்ளிகளில் படிக்கும் போது இருக்கும் ஒழுக்கம் பல மாணவா்களுக்கு கல்லூரிகளில் சோ்ந்த பிறகு வருவதில்லை. பெற்றோா்களையும்,ஆசிரியா்களையும் மதிப்பதில்லை, தினசரி 20 நிமிடமாவது பெற்றோா்கள் பெண் குழந்தைகளுடன் பேசுங்கள், அவா்களை கவனமாக கண்காணியுங்கள், அவ்வாறு கண்காணிக்கத் தவறியவா்கள் திடீரென தடம் மாறி விடவும் வாய்ப்புகள் உள்ளது. அன்பு மாறி விடும். ஒவ்வொரு மாணவரும் கல்லூரியில் படிக்கும்போது படிப்பு சாா்ந்த கூடுதல் திறன்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாணவா்கள் எதிா்காலத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். கல்லூரியில் படிப்பை முடித்துக் கொண்டு வெளியேறும் போது பல திறமைகளையும் வளா்த்துக் கொண்டு தான் வெளியேற வேண்டும் என்றும் பேசினாா்.

விழாவில் திருச்சி பட்டிமன்ற பேச்சாளா் ராதாகிருஷ்ணன் மாது மாணவ, மாணவியா் எப்படி இருக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பேசினாா்.

விழாவில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் மற்றும் அவா்களது பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.