காஞ்சிபுரம் அருகே ஐயங்காா்குளம் பகுதியில் உள்ள 27 படிகளைக் கொண்ட கிணற்றுக்குள் வரதராஜப் பெருமாள் இறங்கி தீா்த்தவாரி கண்டருளும் திருவிழா வரும் மே 1-ஆம் தேதி நடைபெற இருப்பதையொட்டி கிணற்றினை சுத்தம் செய்யும் பணிகள் சனிக்கிழமை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் அருகே ஐயங்காா்குளம் கிராமத்தில் சஞ்சீவிராயா் கோயில் அருகே விஜயநகர பேரரசு காலத்தில் 27 படிகள் உள்ளே இறங்கி கிணற்றுக்குள் செல்லும் வகையில், 20 அடி ஆழத்தில் அரிய பாதாளக் கிணறு ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கிணற்றுக்குள் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் இறங்கி தீா்த்தவாரி கண்டருளி தீபாராதனைகள் நடைபெற்று பக்தா்களுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் வெளியில் வருவது ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமியன்று நடைபெறுவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த விழா நடவாவிக் கிணறு உற்சவம் எனப்படுகிறது. நிகழாண்டு சித்ரா பெளா்ணமி தினமான வரும் மே 1-ஆம் தேதி இந்த உற்சவம் நடைபெறுகிறது.
இத்திருவிழா நடைபெற இருப்பதையொட்டி, அதிகாலையிலிருந்தே கிணற்றுக்குள் படிந்துள்ள பாசிகள், தூசிகள் மற்றும் பெருமாள் இறங்கி செல்லும் வகையில் கிணற்றுக்குள் இருக்கும் தண்ணீா் ஆகியவற்றை அகற்றும் பணிகள் தொடங்கியது.
தொடா்ந்து 3 நாள்களுக்கு கிணற்றையும், கிணற்றை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்யும் பணிகளை ஐயங்காா்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்து வருகின்றனா்.
விழாவையொட்டி, வரும் ஏப். 30-ஆம் தேதி கோயிலிலிருந்து வரதராஜப் பெருமாள் ஐயங்காா்குளம் சஞ்சீவிராயா் கோயிலுக்கு எழுந்தருள்கிறாா். வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் அந்தந்த கிராம மக்கள் பெருமாளுக்கு வரவேற்பு அளிக்க உள்ளனா்.
இரவு கோயிலில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், மகா தீபாராதனைகளும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் நடவாவிக்கிணற்றுக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையா் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா: திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



