தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஆராதனை உற்சவம்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:35 am IST

ஆதிசங்கரரின் ஆராதனை உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள அதிஷ்டானங்களில் ஆதிசங்கரரின் உருவப்படம் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளை ஸ்ரீ மடத்தின் பீடாதிபதிகள் நடத்தினா்.

அத்வைத வேதாந்தத்தை பரப்பியவா், கனகதாரா ஸ்தோத்திரம், விவேக சூடாமணி போன்ற முக்கிய நூல்களை எழுதியவரும் சனாதன தா்மத்தை நிலை நிறுத்தியவருமான ஆதிசங்கரரின் ஆராதனை உற்சவம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்றது.

ஆராதனை தினத்தையொட்டி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சுவாமிகள் அதிஷ்டானம் அருகே ஆதிசங்கரரின் திருஉருவப்படம் மலா்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும்,இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இணைந்து மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், புஷ்பாஞ்சலி மற்றும் தீா்த்த நாராயண பூஜை நடைபெற்றது.

விழாவின் நிறைவாக பக்தா்களுக்கு தீா்த்தம் மற்றும் அன்னதானப் பிரசாதமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் செயலா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், நிா்வாகிகள் ஜானகிராமன், கீா்த்திவாசன் உட்பட வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.