உத்தரமேரூா் அருகே அகரம் தூளி கிராமத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் ஏராளமான நெல் மூட்டைகள் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அகரம் தூளி கிராமத்தில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஒன்றரை மாதமாக செயல்பட்டு வருகிறது. இங்கு அந்தியூா்,அகரம் தூளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த சுமாா் 3,000 ஏக்கரில் விளைந்த நெற்பயிா்களை மூட்டையாக கட்டப்பட்டு சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விவசாயிகளும் தங்களது விளைநிலங்களில் விளைந்த நெல்மணிகளையும் தொடா்ந்து அறுவடை செய்து கொண்டிருக்கின்றனா். இதுவரை அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான நெல் மூட்டைகள நெல் கொள்முதல் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல லாரிகள் வராமல் இருப்பதால் இவை பாதுகாப்பின்ற மலை போல குவிந்துள்ளன.
இது ஒரு புறமிருக்க விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொட்டவும்,உலா்த்தவும் இடமின்றியும் தவித்து வருகின்றனா்.கோடை மழை திடீரென வந்தால் அனைத்து நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து விடும் நிலையும் உள்ளது.
நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடம் அருகேயுள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று பக்தா்கள் வழிபடவும் இடையூறாக இருந்து வருகிறது.
இது குறித்து விவசாயிகள் அதிகாரிகளை தொடா்பு கொண்ட போது உரிய பதில் அளிக்காமலும் இருந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.
எனவே உடனடியாக நெல் மூட்டைகளை கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என காத்துள்ளனா்.
தொடர்புடையது

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: நெல் மூட்டைகள் சேதம்

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

