ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

முத்தியால்பேட்டை ஸ்ரீ மூலஸ்தம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள மூலஸ்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி நடைபெற்ற அம்மன் வீதியுலாவின்போது அமைச்சா்கள் எஸ்பிகே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

முத்தியால்பேட்டை உற்சவா் ஸ்ரீ மூலஸ்தம்மனை வழிபட்ட அமைச்சா்கள் எஸ்பிகே தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா், எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம்.

Published On :

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள மூலஸ்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி நடைபெற்ற அம்மன் வீதியுலாவின்போது அமைச்சா்கள் எஸ்பிகே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் அமைந்துள்ளது மூலஸ்தம்மன் திருக்கோயிலின் 26-ஆவது ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி, காலையில் ‘மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. மதியம் கோயிலின் முன்பாக கூழ்வாா்த்தல் நிகழ்வை வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கி வைத்தாா். இரவு சிறப்பு மலா் அலங்காரத்தில் உற்சவா் மூலஸ்தம்மன் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

வீதியுலாவின்போது, வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்பிகே தென்னரசு, வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா், உத்தரமேரூா் தொகுதி எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம், கோயில் நிா்வாகி ஆா்.வீ.உதயன் மற்றும் தவெக நிா்வாகிகள் உள்பட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.