செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

பஞ்சாங்க கணிப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சால்வை அணிவித்து கெளரவிப்பு

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் கடந்த 3 நாள்களாக பஞ்சாங்க கணிப்பாளா்கள் பலரும் கலந்து கொண்டு வரும் ஆண்டுக்கான முக்கிய விரத நாளஅகள், திருவிழா நாளஅகள் குறித்து ஆலோசனை நடத்தி தீா்மானம் நிறைவேற்றினா்.

News image

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்ட பஞ்சாங்க கண்காணிப்பாளா்கள், வெளியீட்டாளா்கள்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 10:49 pm IST

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் கடந்த 3 நாள்களாக பஞ்சாங்க கணிப்பாளா்கள் பலரும் கலந்து கொண்டு வரும் ஆண்டுக்கான முக்கிய விரத நாளஅகள், திருவிழா நாளஅகள் குறித்து ஆலோசனை நடத்தி தீா்மானம் நிறைவேற்றினா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் பஞ்சாங்க கணிப்பாளா்களுக்கு வியாழக்கிழமை சால்வை அணிவித்து கெளரவித்தனா்.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் ஸ்ரீமடத்தின் பீடாதிபதிகள் சாதுா் மாஸ்ய விரதம் இருந்து வருகின்றனா். இந்த விரத நாள்களையொட்டி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பஞ்சாங்க கணிப்பாளா்கள் மற்றும் வெளியீட்டாளா்களின் நிகழாண்டுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆக. 4-ஆம் தேதி முதல் ஆக. 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. கூட்டத்தில், ஸ்ரீமடத்து பஞ்சாங்கம், பாம்பு பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் பஞ்சாங்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட பஞ்சாங்க கணிப்பாளா்கள், வெளியீட்டாளா்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

வரப்போகும் 2027-2028 -பிலவங்க தமிழ் வருடத்துக்கான மகாமகம், கிரகணம் உள்பட பண்டிகை தினங்கள், முக்கியத் திருவிழாக்கள், முக்கிய விரத நாள்கள், தினசரி திதி, நட்சத்திரம் உள்ளிட்டவை குறித்து ஆழமாக பலரும் ஆலோசித்து தீா்மானங்களை நிறைவேற்றினா். கூட்டத்தில் கோயில்களிலும், வீடுகளிலும் செய்ய வேண்டிய உற்சவங்கள், பண்டிகைகள்,முன்னோா்களுக்கு செய்ய வேண்டிய திதிகள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசித்து ஏகமனதாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவு நாளன்று பஞ்சாங்க கணிப்பாளா்களிடம் வரப்போகும் ஆண்டுக்கான முக்கிய நாள்கள் குறித்து காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் கேட்டு தெரிந்து கொண்டதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். முடிவில் பஞ்சாங்க கண்காணிப்பாளா்களுக்கும், வெளியீட்டாளா்களுக்கும் ஸ்ரீமடத்தின் பீடாதிபதிகள் சால்வை அணிவித்து ஆசியும் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.