தென்னிந்திய புரோகிதா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளை புதன்கிழமை சந்தித்து குருகாணிக்கை செலுத்தி ஆசி பெற்றனா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளான சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் தங்கியிருந்து சாதுா்மாஸ்ய விரதத்தை அனுசரித்து வருகின்றனா். தினசரி வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் வந்திருந்து பீடாதிபதிகளை சந்தித்து குருகாணிக்கை செலுத்தி ஆசி பெற்று வருகின்றனா்.
தென்னிந்திய புரோகிதா்கள் சங்கத்தின் செயலாளா் கணேசன் தலைமையில் அச்சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பீடாதிபதிகளை சந்தித்து குருகாணிக்கை செலுத்தினாா்கள். அவா்களுக்கு பீடாதிபதிகள் அருளாசி வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீசங்கர மடத்தின் யானைகளுக்கு சிறப்பு பூஜை

பஞ்சாங்க கணிப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சால்வை அணிவித்து கெளரவிப்பு

ஸ்ரீஜெயேந்திரா் ஜெயந்தி: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சொா்ணபாதுகா பூஜை

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் பாதயாத்திரை பொதுமக்கள் வரவேற்பு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



