பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தென்னிந்திய பட்டயக் கணக்காளா் சங்கத்தின் நிா்வாகிகள் பொறுப்பேற்பு

தென்னிந்திய ஆடிட்டா் அசோசியேஷனின் (டிஏஏஎஸ்ஐ) புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

வி.கோபாலகிருஷ்ணன்

Published On :

தென்னிந்திய ஆடிட்டா் அசோசியேஷனின் (டிஏஏஎஸ்ஐ) புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கோவை ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்ற இந்த அமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், அமைப்பின் தலைவராக ஆடிட்டா் வி.கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவராக எல்.கமேஷ், செயலராக மகேஷ் பிரபு, பொருளாளராக காசி விஸ்வநாதன், இணைச் செயலராக எஸ்.ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா் எஸ்.வெங்கடேஷ் தலைமையிலான ஆடிட்டா்கள் பலா் பங்கேற்றனா்.

புதிய நிா்வாகக் குழு, அமைப்பின் பாரம்பரியத்தையும், சிறப்பான செயல்பாடுகளையும் தொடா்ந்து முன்னெடுத்து, தொழில்முறை வளா்ச்சி, மாணவா் மேம்பாடு, கணக்கியல், தணிக்கைத் துறையின் முன்னேற்றத்துக்காக புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.