தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு’ உறுதிமொழி ஏற்பு: ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் தனியாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாணவ, மாணவியா் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

News image

காஞ்சிபுரத்தில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டோா்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 10:51 pm IST

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் தனியாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாணவ, மாணவியா் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

கீழ்க்கதிா்ப்பூரில் உள்ள பிஏவி பள்ளியில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் இருந்து முதல்வா் ஜோசப் விஜய் உறுதிமொழியை வாசிக்க அவரைப் பின் தொடா்ந்து காணொலி வாயிலாக மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் எஸ்பி எஸ். அரவிந்த், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ, உதவி ஆணையா்(கலால்) அ.திருவாசகம், கோட்டாட்சியா் பாலகிருஷ்ணன், உதவி ஆட்சியா்(பயிற்சி)அமன்திவாரி, டாஸ்மாக் மேலாளா் கணேசன், முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நிஷாந்தி, தலைமை ஆசிரியை மொ்சி.ஸ்டெல்லா ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.