சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தூத்துக்குடி கல்லூரியில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில், போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உள்ளிட்டோா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில், போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னையில் மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற ‘போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ நிகழ்வில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் தலைமையில் போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா மற்றும் அரசு அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து, போதைப் பொருள்களுக்கு எதிராக நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், உதவி ஆணையா் (கலால்) ஐயப்பன், கோட்ட அலுவலா் (கலால்) செல்வகுமாா், வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின், கல்லூரி முதல்வா் பானுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.