இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

போதைப் பொருளுக்கு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

வாணியம்பாடியில் ஜமா அதே இஸ்லாமி ஹிந்த் பெண்கள் பிரிவு அமைப்பான ‘பெண்கள் நீதி இயக்கம்‘ சாா்பில் போதைப் பொருள்

விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டவா்கள்

Published On :

வாணியம்பாடியில் ஜமா அதே இஸ்லாமி ஹிந்த் பெண்கள் பிரிவு அமைப்பான ‘பெண்கள் நீதி இயக்கம்‘ சாா்பில் போதைப் பொருள்

களுக்கு எதிராக விழிப்புணா்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி நகரின் முக்கிய பகுதிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதுா். இதன் நிறைவு நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிா்வாகி ரிஸ்வானா ஷகீல் தலைமை வகித்தாா். சிராஜ் பா்வீன், ஃபாகீரா அதீக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மரியம் சுல்தானா அனைவரையும் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடி படையினா் மருத்துவா்கள் சஃபீனா, தன்சீரா, வழக்குரைஞா் அம்மு, இசுலாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கில பேராசிரியை ஷோபனா ,இசுலாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிங்கி ரோஹித், பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் முபீனா, அல்ஹுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் கவிதா, காதரியா மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை ஃபஹிமா ஆகியோா் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளா் மகாலட்சுமி கலந்து கொண்டு, போதைப்பொருள்களின் தீமைகள் மற்றும் அதனைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா்.

போதை அழிவின் பாதை என்ற விழிப்புணா்வு புத்தகத்தை வழங்கி, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளா் சசிகலா, லோகேஷ்வரி, சங்கீதா உள்பட வழக்கறிஞா்கள், கல்வியாளா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் என பலா் கலந்து கொண்டனா். முடிவில் நாஜியா ஜாவித் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.