மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாணவா் பலி: பொதுமக்கள் மறியல்

வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தாா்

வாலாஜாபாத்-தாம்பரம் சாலையில் மறியலில் பங்கேற்றோா். உள்படம்: வல்ல பிரசாத்.

Published On :

வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தாா். இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியான வல்லப்பாக்கம் பாலியக்காரத் தெருவைச் சோ்ந்த வல்ல பிரசாத் (17). இவா் தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தாா. இவா் நண்பா்கள் 3 பேருடன் சோ்ந்து அருகில் உள்ள தோப்பில் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வாலாஜாபாத் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் எனக் கூறி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வல்லப்பாக்கம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் வாலாஜாபாத்-தாம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாலாஜாபாத் போலீஸாா் பேச்சு நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.