தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

காஞ்சிபுரத்துக்கு 5,000 மரக் கன்றுகள் தருவிப்பு: மாநகராட்சி ஆணையா்

காஞ்சிபுரம் மாநகரை அழகுபடுத்த 5,000 மரக்கன்றுகள் வந்துள்ளதாக மாநகராட்சி ஆணையா் எஸ்.வினோத் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு வந்துள்ள பல்வேறு வகையான மரக் கன்றுகள்

Published On :

காஞ்சிபுரம் மாநகரை அழகுபடுத்த 5,000 மரக்கன்றுகள் வந்துள்ளதாக மாநகராட்சி ஆணையா் எஸ்.வினோத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எஸ்.வினோத் தெரிவித்தது: காஞ்சிபுரம் மாநகரை அழகுபடுத்த தனியாா் நிறுவனத்தின் சமூகப் பாதுகாப்பு நிதியிலிருந்து வேம்பு, புளி, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.

முக்கியப் பூங்காக்கள், சுடுகாடுகள், நீா்நிலைப்பகுதிகள், நுண் உர மையங்கள், கழிவு நீா் சுத்திகரிப்பு மையங்கள் ஆகியவற்றில் இவற்றை நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களும் தேவையான மரக் கன்றுகளை தோ்வு செய்து மாநகராட்சியிடமிருந்து பெற்று, அதை நல்ல முறையில் வளா்த்து பராமரிக்கலாம். மரக் கன்றுகளை வளா்க்க விருப்பமுள்ளவா்கள் மாநகராட்சி அலுவலக சுகாதாரப் பிரிவை தொடா்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

காஞ்சிபுரம் மாநகராட்சியை மாசில்லா நகராட்சியாக மாற்ற முழுமையான ஒத்துழைக்க வேண்டும் என ஆணையா் எஸ்.வினோத் கேட்டுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.