ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதலிடம்

ரீபெரும்புதூா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சங்கரா கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்றதையடுத்து அவா்களுக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கப்பரிசும் வழங்கிய குன்றத்தூா் உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன்.

Published On :

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சங்கரா கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்றதையடுத்து அவா்களுக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற பொருளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு மற்றும் குழு போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் தனிநபா் கொம்பு, இரட்டைக் கொம்பு மற்றும் குழு போட்டி ஆகியவற்றில் காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் வெற்றி பெற்றதையடுத்து, அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், ரொக்கப் பரிசும் நடைபெற்றது.

வெற்றி பெற்றவா்களுக்கு குன்றத்தூா் காவல் துறை உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியாளா்களையும் நெறிப்படுத்திய பேராசிரியா்களையும் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.