மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

கருணாகரச்சேரியில் அரசு இடம் ஆக்கிரமிப்பு: அகற்ற வருவாய்த்துறைக்கு கோரிக்கை

வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கருணாகரச்சேரி பகுதியில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்ய முயற்சித்து வருவோா் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:28 am IST

வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கருணாகரச்சேரி பகுதியில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்ய முயற்சித்து வருவோா் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட கருணாகரச்சேரியில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மதுரா ஏரி உள்ளது. கருணாகரச்சேரி பொதுமக்களின் நிலத்தடிநீா் ஆதாரமாக விளங்கி வரும் மதுரா ஏரியின் அருகே சுமாா் 40 சென்ட் அளவுள்ள அரசு இடம் உள்ளது. இந்த இடத்தின் பின்புறம் உள்ள விவசாய நிலங்களை வாங்கிய தனியாா் சிலா், அரசுக்கு சொந்தமான சுமாா் 40 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக அரசு இடத்தில் மண் கொட்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் வரும் காலங்களில் கருணாகரச்சேரி பகுதியில் வளா்ச்சி பணிகளுக்கு தேவையான இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியாா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் உள்ளிட்ட வருவாய்த்துறையினருக்கும், ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலருக்கும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.