மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்ததாக பழைய இரும்பு வியாபாரிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலப்பாளையம் மண்டலம் 52 ஆவது வாா்டுக்குள்பட்ட ரோஸ் நகா் ரெட்டியாா்பட்டி சாலையில் மாநகராட்சிக்குச சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து அதில் பழைய இரும்பு மற்றும் டயா் கடை நடத்தி வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து சுகாதார ஆய்வாளா்கள் பாரதிராஜா, மகாராஜன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தபோது இடத்தை ஆக்கிரமித்திருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில் பழைய இரும்பு வியாபாரிக்கு திடக்கழிவு மேலாண்மை விதியின் கீழ் ரூ.40.000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பொருள்களை உடனே அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இரும்பு வியாபாரி தீக்குளித்து தற்கொலை

இரும்பேடு கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் கோரிக்கை
டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி: கட்டட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!

கொசுப்புழுக்கள் உற்பத்தி: கட்டட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



