உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரூ.10.80 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு

வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கருணாகரச்சேரியில் ரூ.10.80 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

Published On :

வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கருணாகரச்சேரியில் ரூ.10.80 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட கருணாகரச்சேரியில் ஊராட்சி பொது நிதியின் மூலம் ரூ.10.80 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவு பொருள்களை வழங்கினாா்.

இந்த நிகழ்சச்சியில், ஸ்ரீபெரும்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் மற்றும் ஏரிநீா்ப் பாசன சங்க தலைவா் வெங்காடு பி.உலகநாதன், ஊராட்சிமன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.