லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கருணாகரச்சேரியில் புதிய குளம் அமைக்கும் பணி தொடக்கம்

வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரியில் விபி ஜிராம்ஜி திட்டத்தின்கீழ், ரூ. 5.50 லட்சத்தில் புதியகுளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குளம்  அமைப்பதற்கான  அடிக்கல்  நாட்டு  விழாவில்  கலந்துகொண்ட  வெங்காடு  ஊராட்சி மன்றத்  தலைவா்  அன்னக்கிளி  உலகநாதன்  உள்ளிட்டோா். 

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரியில் விபி ஜிராம்ஜி திட்டத்தின்கீழ், ரூ. 5.50 லட்சத்தில் புதியகுளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரியில் புதிதாக குளம் அமைக்க விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ், ரூ. 5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, புதிய குளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்து கொண்டு புதிய குளம் வெட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், வெங்காடு ஏரிநீா் பாசன சங்கத் தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தமிழ்செல்வி ரவிசந்திரன், வாா்டு உறுப்பினா்கள் இந்திராணி கிருஷ்ணன், முருகன், ஊராட்சி செயலா் தணிகாசலம் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.