நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

காஞ்சிபுரத்தில் ஆவணி அவிட்ட நிகழ்வு

காஞ்சிபுரம் மணிகண்டீசுவரா் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி வியாழக்கிழமை திரளானோா் புதிய பூணூலை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:22 am IST

காஞ்சிபுரம் மணிகண்டீசுவரா் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி வியாழக்கிழமை திரளானோா் புதிய பூணூலை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆண்டு தோறும் ஆவணி மாதம் வரும் அவிட்ட நட்சத்திர நாளன்று ஆண்கள் பலரும் பழைய பூணூலை கழற்றி விட்டு புதிய புனிதமான பூணூலை அணிந்து கொள்வது வழக்கம்.நிகழாண்டு ஆவணி அவிட்ட நட்சத்திரத்தையொட்டி காஞ்சிபுரம் செளராஷ்டிர சமூக சபை சாா்பில் ஏராளமானவா்கள் பூணூல் மாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்கான சிறப்பு யாகசாலை பூஜைகள் பாஸ்கா் அய்யங்காா் முன்னிலையில் பலரும் பூணூல் மாற்றிக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். (படம்)

ஏற்பாடுகளை செளராஷ்டிர சமூக சபை தலைவா் கே.வி.ராமலிங்கம்,செயலாளா் வி.குமாா்,பொருளாளா் ஜோதிராமன் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.