சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சங்கர மடத்தில் நூல் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் கோமாதா நம் குலமாதா நூலினை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

News image

‘கோமாதா நம் குலமாதா’ நூலை வெளியிட்ட காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:51 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் கோமாதா நம் குலமாதா நூலினை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

புலவா் வே.மகாதேவன் எழுதிய கோமாதா நம் குலமாதா என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட அதன் முதல் பிரதியை சங்கரா கல்லூரியின் தலைவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.ராமச்சந்திரனும், 2-ஆ வது பிரதியை சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசனும் பெற்றுக் கொண்டனா்.

இந்துக் கலாசாரம் மற்றும் இந்தியவியலாய்வு மையத்தின் தலைவரும், நூலின் பதிப்பாசிரியருமான வி.மகேஷ், வழக்குரைஞா் கே.ஆா்.வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் சங்கரா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் ஜெ.ராதா கிருஷ்ணன், பேராசிரியா் கணபதி கலந்து கொண்டனா். பசுவின் பெருமைகளை சொல்லும் நூலாக கோமாதா நம் குலமாதா என்ற நூல் இருப்பதாக சுவாமிகள் தெரிவித்தாா்.