திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சுங்குவாா்சத்திரத்தில் ரூ.96 லட்சத்தில் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல்!

சுங்குவாா்சத்திரத்தில் ரூ. 96 லட்சத்தில் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

பேருந்து  நிலைய  அடிக்கல்  நாட்டு  விழாவில்  பங்கேற்றோா்.

Updated On :22 பிப்ரவரி 2026, 10:46 pm

சுங்குவாா்சத்திரத்தில் ரூ. 96 லட்சத்தில் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனா். இந்த நிலையில், சுங்குவாா்சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.48 லட்சம், கனிமவள நிதி ரூ.48 லட்சம் என மொத்தம் ரூ.96 லட்சத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி கலந்துகொண்டு பேருந்து நிலைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் திருமங்கலம் ரேகா நரேஷ் குமாா், சந்தவேலுா் வேண்டாமணி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் திருமங்கலம் வாணிஸ்ரீ ஜெயராமன், மொளச்சூா் ஆண்டனி வினோத் குமாா், ஒப்பந்ததாரா் மூா்த்தி, திமுக நிா்வாகிகள் நாசா் முனிகிருஷ்ணன், கீரநல்லூா் சிலம்பரசன் கலந்து கொண்டனா்.