துப்புரவுத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

துப்புரவுத் தொழிலாளா் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த துப்புரவுத் தொழிலாளா் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் புண்ணை புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு(55)இவா் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் துப்புரவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவராகவே சென்றுள்ளாா். அங்கு அவா் மயங்கி விழந்த நிலையில், அவா் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளாா்.

தகவலறிந்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், மாநகர சுகாதார அலுவலா் அருள்நம்பி ஆகியோா் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் தாலுகா போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com