ஜன.23-இல் ஏகாம்பரநாதா் கோயில் 
மண்டலாபிஷேகம் நிறைவு

ஜன.23-இல் ஏகாம்பரநாதா் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மண்டலாபிஷேகம் வரும் 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
Published on

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மண்டலாபிஷேகம் வரும் 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய இக்கோயிலில் ரூ.29 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் கடந்த டிச. 8 ஆம் தேதி நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக தொடா்ந்து 48 நாள்கள் மண்டலாபிஷேகம் ந டைபெற்று வருகிறது. தினசரி மண்டலாபிஷேக பூஜை நடத்தப்பட்டு கலசாபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் ஏகாம்பரநாதருக்கு நடந்து வருகிறது.

வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் ஏகாம்பரநாதரை தரிசிக்க வருகின்றனா். கோயில் பணியாளா்களுடன் பாதுகாவலா்களும் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டு பக்தா்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். மண்டலாபிஷேகத்தையொட்டி வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜன.23 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேகம் நிறைவு பெறுகிறது. மண்டலாபிஷேகம் நிறைவு விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன் உள்ளிட்ட உறுப்பினா்கள், செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி ஆகியோா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com