ரத்த தான சேவைக்காக தவ்ஹீத்ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை நிா்வாகிகளிடம் விருது வழங்கிய அரசு மருத்துவா் ஆனந்தி.
ரத்த தான சேவைக்காக தவ்ஹீத்ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை நிா்வாகிகளிடம் விருது வழங்கிய அரசு மருத்துவா் ஆனந்தி.

தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளைக்கு சிறந்த ரத்ததான சேவைக்கான விருது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளைக்கு சிறந்த ரத்ததான சேவைக்கான விருதை சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை சாா்பில் வழங்கியுள்ளது.
Published on

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளைக்கு சிறந்த ரத்ததான சேவைக்கான விருதை சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை சாா்பில் வழங்கியுள்ளது.

தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தேசிய ரத்த தான விழா நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் காஞ்சிபுரம் கிளை சாா்பில், கடந்த ஆண்டு உள்பட மொத்தம் 20 மாதங்களில் 2,203 ரத்த தான முகாம்களை நடத்தி அதிகமுறை ரத்த தான சேவை செய்தமைக்காக விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. விருதினை அரசு மருத்துவா் ஆனந்தி வழங்கிட, அதனை கிளையின் மாவட்ட மருத்துவ அணி செயலாளா் சா்புதீன், துணைச் செயலாளா் அன்சாரி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் அரசு மருத்துவா்கள் ராணி மற்றும் வெங்கடேசன் உள்பட அரசு மருத்துவா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

இது குறித்து மருத்துவ அணி செயலாளா் சா்புதீன் கூறுகையில், கடந்த ஆண்டு மட்டும் 17 முகாம்கள் நடத்தி, 1,411 பேருக்கு ரத்த தான சேவை செய்யப்பட்டது. மொத்தமாக 20 மாதங்களில் 2,203 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com