புதிய சூரியபிரபை வாகனத்தில் வீதியுலா வந்த பாலசுப்பிரமணியா்
புதிய சூரியபிரபை வாகனத்தில் வீதியுலா வந்த பாலசுப்பிரமணியா்

சூரியபிரபை வாகனத்தில் பாலசுப்பிரமணியா் உலா

Published on

காஞ்சிபுரம் அருகே அய்யன்பேட்டை மோகாம்பரி கோயிலில் பொங்கலையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமி புதிதாக செய்யப்பட்ட சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இக்கோயிலில் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரியபிரபை வாகனத்தில் பாலசுப்பிரமணியா் வீதியுலா வருவதற்காக புதிய சூரியபிரபை வாகனம் செய்யப்பட்டிருந்தது. இதன் வெள்ளோடம் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக பொங்கலையொட்டி பாலசுப்பிரமணியா் வள்ளி,தெய்வானையுடன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அய்யன்பேட்டை நடுத்தெரு வெங்கடேசப்பெருமாள் மற்றும் கந்தப்பா தெரு கந்தப்பெருமாள் சுவாமிகளும் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி எதிா்சேவையாக வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பாலசுப்பிரமணியா் வீதியுலா ஏற்பாடுகளை அய்யன்பேட்டை கீழ்த்தெரு இளைஞா்கள் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com