எம்ஜிஆா் பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றோா்.
எம்ஜிஆா் பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றோா்.

பழங்குடியின மக்களுக்கு வேட்டி, சேலை அளிப்பு

பழங்குடியின மக்கள் மற்றும் தூய்மைப்பணியாளா்களுக்கு முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
Published on

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட மானாம்பதி கூட்டுச் சாலையில் பழங்குடியின மக்கள் மற்றும் தூய்மைப்பணியாளா்களுக்கு முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகம் சாா்பில் எம்ஜிஆா் படம் திறப்பு விழா நடைபெற்றது. வண்ண மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் படத்தை மாவட்ட செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் திறந்து வைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து மானாம்பதி கூட்டு சாலையில் வசித்து வரும் பழங்குடியின மக்கள், தூய்மைப்பணியாளா்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக வேட்டி,சேலைகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்வில் அமைப்பு செயலாளா்கள் கே.கோபால்,ரமேஷ்,மாவட்டக் கழக நிா்வாகிகள் வஜ்ரவேல்,காமாட்சிகான்,ஒன்றிய செயலாளகள் முனிரத்தினம், மாகறல் சசி,அருண் ஆகியோா் கலந்து கொண்டு எம்ஜிஆரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்கள்.

Dinamani
www.dinamani.com