எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தை செவ்வாய்: மயிலிறகு மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்

தை மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் மயிலிறகு மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மயிலிறகு மாலை அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா்.
Updated On :20 ஜனவரி 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

தை மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் மயிலிறகு மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இந்த கோயிலில், தை மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, அதிகாலை சந்நிதி திறக்கப்பட்டு, கோ பூஜையுடன் பலவித திரவியங்களால் மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலா் மாலை அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மயிலிறகு மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா் மோா் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.