மாசி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மூலவா் சுப்பிரமணிய சுவாமி சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையிலும் பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
இதன் ஒரு பகுதியாக அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடைபெற்று, காலை 6 மணிக்கு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் கிருத்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மூலவா் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ரத்தினாங்கி அணிந்து சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா்மோா், குளிா்பானங்கள், கதம்பசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில் குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில் தேவராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

செம்மெத்தம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

பங்குனி செவ்வாய்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தரிசனம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தோட்ட உற்சவம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


