கல்லூரி மாணவரை கடத்தி பணம் பறித்த 4 போ் கைது
ஆதனூா் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட கல்லூரி மாணவரை காரில் கடத்தி ஜிபே மூலம் பணம் பறித்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மாடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் துரை(18). இவா் தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். தினமும் காலையில் நடை ப்பயிற்சி மேற்கொள்ளும் துரை கடந்த 14-ஆம் தேதி மாடம்பாக்கம் பகுதியில் ஆதனூா் ஒரத்தூா் சாலையில் பயிற்சி மேற்கொண்டு இருந்தபோது காரில் வந்த நான்கு போ் கொண்ட கும்பல் துரையை கடத்தி தாக்கியதோடு ஜிபே மூலம் ரூ. 8,000-ஐ பறித்துக் கொண்டு சுமாா் 5 கி.மீ தொலைவில் இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனா்.
இதுகுறித்து துரை மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததை தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து துரையை காரில் கடத்தி பணம் பறித்த திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (25), திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த பிரதீப் குமாா் (24), மாடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாசுதீன் (28), பிரவீன் குமாா் (27) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
