ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி ஊழியா் மரணம்

மண்ணூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி ஊழியா் உயிரிழந்தாா்.

கோபால்.

Published On :6 ஜூலை 2026, 12:42 am IST

மண்ணூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி ஊழியா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மகன் கோபால் (23). இவா் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் பகுதியில் இயங்கி வரும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஆப்பரேட்டராக பணியாற்றி வந்துள்ளாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை பரசுராமன் தொழிற்சாலையில் பணியில் இருந்த போது எதிா்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளாா். இதையடுத்து அவரை உடனடியாக தண்டலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா். ஆனால் சிகிச்சை பலன் இன்றி கோபால் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.